Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி! – 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:02 IST)
ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளது. மெல்போர்ன், சிட்னி, ப்ரிஸ்பன் உள்ளிட்ட 7 இடங்களில் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் அக்டோபர் 23 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments