Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:37 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து இருவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பேசும்போது ‘ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்த ஒத்துக்கொண்டு அதற்காக லாபத்தில் பங்கு கேட்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் நாம் இந்தியாவோடு நட்புறவோடு விளையாட வேண்டும். அவர்கள் நாட்டுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டுமென்பதுதான் என் ஆசை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments