Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட்டு கட்டு போல சரிந்த விக்கெட்கள்… ஆஸி சுழலை சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (10:40 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பேட் செய்ய முடிவெடுக்க, இந்திய அணி களமிறங்கிய ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.

ஆனால் ஆறாவது ஓவரிலேயே சுழல்பந்து வீச்சைக் கொண்டு வந்தார் ஆஸி கேப்டன் ஸ்மித். உடனடியாக இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்கள் விக்கெட்களை காப்பாற்ற முடியாமல் அவுட் ஆகி வெளியேறினார். தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இந்த ஐந்து விக்கெட்களை ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது களத்தில் கோலியும் கே எல் பரத்தும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments