Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால்....பாகிஸ்தான் கிரிகெட் தலைவர் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (17:48 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்த முறை பாகிஸ்தானில் நடந்தால், இந்தியா பங்கேற்காவிடில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்த நாட்டு கிரிக்கெட் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக கடந்த 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய  நாடுகளைக் கொண்ட ஆசிய கிரிக்கெட் போட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம்.

இதுவரை 15 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன.

இந்த ஆண்டு போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாததால்,  இப்போட்டி பொதுவாக ஒரு இடத்திற்கு மாற்றப்படலம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா கூறியிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இம்முறை ஐக்கிய அரபு அமீரககத்தில்  நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்   நஜம் சேதி,’’பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட்டில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர் -  நவம்பரில்  இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று  கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments