Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!

Parvez Musharraf
, ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (11:46 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி பர்வேஸ் முஷரஃப் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 79. 
 
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் ராணுவ தளபதி பர்வேஸ் முஷரஃப் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
பாகிஸ்தான் நாட்டின் பத்தாவது அதிபராக பர்வேஸ் முஷரஃப் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!