Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தொடரில் ஓய்வு கேட்கும் ஹர்திக் பாண்ட்யா! அப்ப யாரு கேப்டன்?

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (14:11 IST)
இந்திய அணி இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் அடுத்து இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுப் பயணத்த்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த தொடரின் டி 20 போட்டிகளுக்கான அணியில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ வசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments