Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவ்ராஜ் சிங்கின் ஆல்டைம் ஒருநாள் அணியில் தோனிக்கு இடமில்லையா?... ரசிகர்கள் அதிருப்தி!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (10:02 IST)
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஓய்வு பெற்ற வீரர்களுக்கான உலகக் கோப்பை தொடரை அவர் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில் அவரிடம் ஆல்டைம் பேவரைட் ஒருநாள் அணியை தேர்வு செய்ய சொல்லப்பட்டது. அவர் தேர்வு செய்த அணியில் இந்திய வீரர்கள் மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. மேலும் தன் பெயரையும் சேர்க்காத யுவ்ராஜ் தன்னை 12 ஆவது வீரராக அறிவித்துள்ளார்.

யுவ்ராஜின் கனவு ஒரு நாள் அணி:-
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments