Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை அன்பாலோ செய்த ஹர்திக் பாண்ட்யா… என்னதான் நடக்குது மும்பை இந்தியன்ஸ் அணியில்?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:54 IST)
சில தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அதற்காக மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் இதுவரை ரோஹித் ஷர்மாவை பாலோ செய்துவந்த ஹர்திக் பாண்ட்யா இப்போது அவரை அன் பாலோ செய்துள்ளார். இது ரசிகர்கள் இடையே மேலும் அவர் வெறுப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments