Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்… இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் ஒதுங்கிய ஹர்திக் பாண்ட்யா!

vinoth
செவ்வாய், 28 மே 2024 (07:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.


மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- அகஸ்தியா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹர்திக் அவரது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்யும்பட்சத்தில் அவரின் சொத்துகளில் 70 சதவீதத்தை அவருக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளை அவருடையா தாயாரின் பெயரில்தான் வாங்கி வைத்திருக்கிறாராம். அதனால் பெரிய தொகை ஒன்றும் நடாஷாவுக்குக் கிடைக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த குடும்ப விவகாரம், ஹர்திக் பாண்ட்யாவை கடுமையாக பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் இப்போது இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. டி 20 உலகக் கோப்பைக்கான அணிக்கு துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது அமெரிக்கா சென்று அணியோடு இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்