Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்ல விசேஷம்.. இன்று பாகிஸ்தான் போட்டியில் விளையாடவில்லை: ஜாஸ் பட்லர் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (06:43 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட போவதில்லை என இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் அறிவித்துள்ளார்

மே 22ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் ஜாஸ் பட்லர் விளையாடவில்லை என அறிவித்துள்ளார். தனது மனைவிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதால் இன்று நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டனாக இருக்கும் ஜாஸ் பட்லர்  இன்றைய போட்டியில் விளையாடதால் கேப்டனாக யார் நியமனம் செய்யப்படுவார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ஜாஸ் பட்லர் மனைவிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதை எடுத்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments