Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னர் அவர்தான்… அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?- ஹர்பஜன் சிங் கருத்து

vinoth
திங்கள், 22 ஜனவரி 2024 (07:58 IST)
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. சமீபகாலமாகவே அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.  இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் இப்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இந்தியாவின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர் என கூறியுள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து அவர் “அவருக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என தெரியவில்லை. நடக்கவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் எனது முதல் தேர்வாக அவர் இருப்பார். அடுத்து ஜடேஜா இருப்பார். அதன் பின்னர்தான் வாஷிங்டன் சுந்தர் இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments