Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியிடம் கேப்டன்ஷிப் இல்லாதது டேஞ்சரான விஷயம்… பயமுறுத்தும் RCB வீரர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (16:15 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் பாப் டு பிளஸ்சி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான க்ளன் மேக்ஸ்வெல் கோலி கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் இருப்பது எதிரணியினருக்கான ஆபத்து என்று கூறியுள்ளார். மேலும் ’கேப்டன் பொறுப்பு என்பது கண்டிப்பாக ஒரு சுமைதான். அதனால்தான் கோலி அந்த பொறுப்பை நீண்ட காலமாக சுமந்து வந்த நிலையில் இப்போது அதில் இருந்து விலகியுள்ளார். அவர் அழுத்தம் இல்லாமல் விளையாடுவது எதிரணியினருக்கு ஆபத்தான ஒன்றுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments