Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கம்பீருக்காக இறங்கி வந்த ரோஹித் & கோலி… இலங்கை தொடருக்குள் வந்ததன் பின்னணி!

Advertiesment
கம்பீருக்காக இறங்கி வந்த ரோஹித் & கோலி… இலங்கை தொடருக்குள் வந்ததன் பின்னணி!

vinoth

, வெள்ளி, 19 ஜூலை 2024 (07:50 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான பும்ரா, ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதற்குக் காரணம் என்ன என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. பயிற்சியாளராக தன்னுடைய முதல் தொடர் என்பதால் அனைத்து வீரர்களும் அணிக்குள் இருக்க வேண்டும் என கம்பீர் ஆசைப்பட்டு ரோஹித் மற்றும் கோலி ஆகியோரிடம் பேசியதால், அவர்கள் தாங்கள் இந்த தொடரில் விளையாடத் தயார் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்துதான் அவர்கள் பெயர்கள் அணிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை விவாகரத்து செய்கிறேன்.. அதிகாரபூர்வமாக அறிவித்த ஹர்திக் பாண்ட்யா..!