Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீம் 11 யாருடைய தேர்வு? தோனிக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதா?

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:05 IST)
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா ஆப்கான் அணிகள் விளையாடிய போது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டார். 
 
போடி டிரா ஆன் போது தோனி, நாங்கள் கையுடைந்த நிலையில்தான் போட்டியில் இறங்கினோம், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என தெரிவித்தார். தற்போது இதனால் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
 
ஆம், கேப்டனோடு சேர்த்து விளையாடும் லெவனை தேர்வு செய்தது யார்? கேப்டன் தோனி என்றால் அவர்தானே விளையாடும் லெவனையும் தேர்வு செய்ய வேண்டும்? தோனிதான் அணியை தேர்வு செய்தாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இதனை ஆதரிக்கும் வகையில் சவுரவ் கங்குலி, யார் அணியைத் தேர்வு செய்கிறார்கள் ரோஹித் சர்மாவா, ரவிசாஸ்திரியா? என கேட்டுள்ளார். 
 
அதோடு, இப்போதைய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கால்பந்து அணியைப் போல் கிரிக்கெட்டை நடத்த விரும்புகின்றனர். ஆனால் கிரிக்கெட் கேப்டன்களின் ஆட்டம். பயிற்சியாளர் பின்னால் இருந்து பயிற்சியளிக்கலாம் அவ்வளவே என நெத்தியடி பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments