Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் வெற்றி பெறவில்லை? ஒரு நாள் கேப்டன் தோனி பதில்

Advertiesment
ஏன் வெற்றி பெறவில்லை? ஒரு நாள் கேப்டன் தோனி பதில்
, புதன், 26 செப்டம்பர் 2018 (18:29 IST)
ஆசியக் கோப்பை போட்டியில் ஆப்கான் உடன் நடந்த போட்டியில் இந்தியா ஏன் வெற்றி பெறவில்லை என நேற்றைய ஒரு போட்டிக்கு மட்டும் கேப்டனாக இருந்த தோனி பதிலளித்துள்ளார். 
 
போட்டியை டிரா செய்தது குறித்து தோனி கூறியது பின்வருமாறு, ஆப்கன் அணியின் கிரிக்கெட் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஒரே அணிதான் தகுதியுடன் வரிசைப்படி முன்னேற்றம் கண்டுள்ளது.
 
நாங்கள் தவறாக ஆடினோம் என்று கூறவரவில்லை. முக்கிய வீர்ர்களுக்கு ஓய்வு அளித்து விட்டது தவறு. அதே போல் பேட்டிங்கில் ஷாட் தேர்விலும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 
 
இரண்டு ரன் அவுட்கள் மற்றும் 2 பிற விஷயங்கள் உள்ளன, அதைப்பற்றி பேசி நான் அபராதம் விதிக்கப்பட விரும்பவில்லை. இவை அனைத்தும் வெற்றி பெறாததற்கான காரணமாக கருதுகிறேன் என தோனி தெரிவித்துள்ளார். 
 
2 விஷயங்களை கூறி அபராதம் கட்ட விரும்பவில்லை என்று கூறியது தனக்கும், கார்த்திக்கிற்கும் தவறாக நடுவர் எல்.பி.தீர்ப்பு வழங்கியதைத்தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - இலங்கை டி20 போட்டி: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி