Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’உத்வேகமூட்டும் மனிதர்’’ அமித்ஷாவை புகழ்ந்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!

Advertiesment
amithsha
, வியாழன், 2 மார்ச் 2023 (22:22 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன்  இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர் சன்.  இவர், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181 ரன்கள் அடித்து, 47.29 சராசரி வைத்துள்ளார். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4440 ரன்கள் அடித்து, 40.73 சராசரி வைத்துள்ளார். 37 டி-20 போட்டிகளில் விளையாடி 1176 ரன்கள் அடித்திருந்தார்.  ஐபிஎல் –ல் 36 போட்டிகளில் விளையாடி 1001 ரன்கள் அடித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை விளையாடிய பீட்டர்சன், பேட்டிங் மட்டுமின்றி சிறந்த பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு உதவியவர் ஆவார்..

தற்போது, கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் பீட்டர் சன் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ’’வசீகரிக்கும் உரையாடல், கருணை, பரிவு, ஊக்கமூட்டுகின்ற மனிதர்’’ என்று அமித்ஷாவை அவர் புகழ்ந்து, நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. வெற்றியை நெருங்கிய மே.இ.தீவுகள்..!