Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (09:27 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

இந்த போட்டியின் தொடக்கத்தில் டெல்லி அணி முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இழந்து தடுமாறியது. அதனால் போட்டி முழுவதும் லக்னோ கைவசம் இருந்தது. ஆனால் இம்பேக்ட் ப்ளேயராகக் களமிறங்கிய அஷூடோஷ் ஷர்மா வான வேடிக்கைக் காட்டி வெற்றியைத் தட்டிப்பறித்தார். இந்த போட்டியின் இறுதி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் மோஹித் ஷர்மா அஷூடோஷுக்கு ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுத்தார்.

இந்த சிங்கிள் குறித்துப் பேசியுள்ள பாஃப் டு பிளஸ்சி “மோஹித் ஷர்மா எடுத்த அந்த சிங்கிள் அவரது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். அந்த சிங்கிள் 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 438 ரன்களைத் துரத்திய போது மக்காயா நிட்டினி எடுத்த சிங்கிளை நினைவுபடுத்தியது” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments