ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பூரன் மற்றும் மார்ஷ் அபாரமாக பேட்டிங் செய்தும், கடைசி ஓவரில் அந்த அணி தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடியதுடன், தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரிஷப் பண்ட் உள்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாக இருந்தாலும், 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்களும், விபராஜ் நிகம் 39 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், கடைசி ஓவரில் டெல்லி அணி ஆறு ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து, டெல்லி அணியின் வெற்றியை சர்மா உறுதி செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Edited by Siva