Publish Date: Mon, 07 Aug 2023 (08:00 IST)
Updated Date: Mon, 07 Aug 2023 (08:15 IST)
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த முறை 10 அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் எந்தந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் அணிகளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுபற்றி பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த உலகக்கோப்பை தொடரை வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கணிப்பின்படி இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.