Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (10:07 IST)
உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதிர்ச்சி முடிவாக ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் இப்ராஹிம் ஸார்டான் ஆகியோர் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பியதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. இதையடுத்து பேட் செய்த ஆஸி அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் 19.2 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்வது சிக்கலாகியுள்ளது. இதையடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஆஸி தோற்று, ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வென்றால் ஆஸி அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments