Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (10:02 IST)
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடவந்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. அதனால் அடித்து ஆடமுயன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த வெற்றியால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதில் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த பந்து பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டுக்குள் புகுந்தது. அந்த இடத்தில் பால் பாய் இல்லாததால் பந்தைத் துரத்திச் சென்ற கோலியே அதற்குள் புகுந்து பந்தை தேடி எடுத்தார். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments