Publish Date: Fri, 12 Feb 2021 (15:01 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (15:12 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் நான்கு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாம் டெஸ்ட்டில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போது விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆண்டர்சன் மற்றும் டாம் பெஸ் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக பென் ஃபோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.