Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்து வீரர் சாதனை!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:17 IST)
கடந்த 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு,  பாகிஸ்தான் நாட்டிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவில்லை.

இந்த நிலையில், 17 ஆண்டடுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இன்று, ராவல்பிண்டியில்  தொடங்கிய டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் கேப்டனாக இருந்தார். இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருந்தார்.

எனவே, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் தொடரில் முதல் நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்சம் ரன்  இதுவாகும்.

இதில், பாகிஸ்தான் விரர் சவுத் ஷகீல் பந்து வீசினார், அப்போது பேட்டிங் செய்த ஹாரி புரூக், ஒரு ஓவரின் 6 பந்துகளிலும்  பவுண்டரி அடித்து அசத்தினார்.

எனவே ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்து, 24 ரன்கள் எடுத்த 5 வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments