Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசி vs இங்கிலாந்து டெஸ்ட்… போட்டியை நிறுத்தி ஷேன் வார்னுக்கு அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:21 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்ன் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமடைந்தார்.

உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) கடந்த மார்ச் மாதம் தாய்லாந்து சென்றிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கிய அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தற்போது நடந்துவரும் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இடையே 23 வினாடிகள் போட்டியை நிறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது ஷேன் வார்ன் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் திரையில் ஒளிபரப்பப்பட்டன. ஷேன் வார்னின் ஜெர்ஸி எண் 23 என்பதால் அதன் நினைவாக 23 வினாடிகள் போட்டி நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments