Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹிபால் வந்து சிக்ஸ் அடித்ததும் என் அழுத்தம் குறைந்தது… அதிரடி இன்னிங்ஸ் குறித்து தினேஷ் கார்த்திக்!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (07:45 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கி தற்போது ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி கடைசி ஓவர் திரில்லராக நடந்து முடிந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் கோலி அவுட் ஆனதும் ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் சாய்ந்தது. அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் ரோம்ரார் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.

போட்டி முடிந்ததும் பேசிய அவர் “என் பேட்டிங் முழுவதுமாக கண்ட்ரோலில் இல்லை. ஆனால் மஹிபால் வந்து ஒரு சிக்சரை அடித்ததும் என் மீதான அழுத்தம் குறைய ஆரம்பித்தது. அவரிடம் அப்படியே விளையாடுமாறு கூறினேன். ஹர்சல் படேலின் மெதுவான பந்துகளை மிஸ் செய்யாமல் ஸ்கூப் செய்யவேண்டுமெனக் காத்திருந்தேன்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இன்று உலகக் கோப்பையில் முதல் போட்டியை விளையாடும் இந்தியா… ப்ளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்?

ஆஸ்திரேலியா மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் சொல்லும் காரணம்!

நான் உலகக் கோப்பைக்காக பக்காவா தயாராகி வந்திருக்கிறேன்… சஞ்சு சாம்சன் நம்பிக்கை!

22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி!

விமான நிலையத்தில் உடைமைகளை இழந்த பாட் கம்மின்ஸ்… மனைவி புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments