Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினேஷ் கார்த்திக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம்… நடத்தை விதிகளை மீறினாரா?

Advertiesment
தினேஷ் கார்த்திக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம்… நடத்தை விதிகளை மீறினாரா?
, வெள்ளி, 27 மே 2022 (17:32 IST)
RCB நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை மிகவும் பாஸிட்டிவ்வாக தொடங்கியுள்ளது RCB அணி. இதுவரை நடந்த 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் செல்வதற்கு பக்கத்தில் இருக்கிறது. இந்த முறை RCB அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய தூணாக இருப்பவர் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியில் புகுந்து விளாசுகிறார். இந்த சீசன் முழுவதும் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராகக் கூட சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் செய்த செயல் லெவல் 1 விதிமீறல் என்று சொல்லப்படுகிறது. அதனால் அதற்கான தண்டனையை களநடுவர்கள்தான் எடுக்கமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக தினேஷ் கார்த்திக்குக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷிகார் தவானைப் புரட்டி எடுக்கும் அவரது தந்தை… ஏன்? வைரலாகும் வீடியோ!