Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடி காட்டிய கில்; சாதனையை தவறவிட்ட தினேஷ் கார்த்திக்! – ரசிகர்கள் வருத்தம்!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (10:24 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு சாதனையை தினேஷ் கார்த்திக் தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வார்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நைட் ரைடஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நைட் ரைடர்ஸின் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் 62 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை கூட்டினார். அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 940 ரன்கள் அடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 60 ரன்கள் அடித்திருந்தால் ஐபிஎல் ஆட்டங்களில் அவரது மொத்த ரன்கள் ஆயிரமாக உயர்ந்திருக்கும். நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் அரை சதமாவது வீழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு ரன் கூட அடிக்காமல் அவர் அவுட் ஆனது அதிர்ச்சியை அளித்தது.

எனினும் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர் தனது ரன்களை அதிகப்படுத்தி 1000 ரன்களை தாண்டி சாதனை புரிவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments