Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அணியை பிடித்து கொண்ட சென்னையின் ஆமைவேகம்!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (09:18 IST)
ஐதராபாத் அணியை பிடித்து கொண்ட சென்னையின் ஆமைவேகம்!
நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆமை வேகத்தில் ஆடியது அவ்வணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேப்டன் வார்னர் தொடக்க ஆட்டக்காரராஅக களமிறங்கி 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய பெயர்ஸ்டோ தட்டுத்தடுமாறி விளையாடி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். மணிஷ் பாண்டே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடியதால் ஹைதராபாத்தின் அணியின் ஸ்கோர் 142 மட்டுமே இருந்தது
 
இதனை அடுத்து 143 என்ற எளிய இலக்கை மிக எளிதாக கொல்கத்தா அணி அடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் கில், நேற்றைய ஆட்டத்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 62 பந்துகளில் அவர் அடுத்த 70 ரன்கள் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்ததோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்
 
அதே போல் கடைசி நேரத்தில் களமிறங்கிய மோர்கன் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 29 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் அவரது கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments