Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“எனக்கு வயதாகிவிட்டது… அதை மறைக்க முடியாது” – தோனி பதில்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (14:22 IST)
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த சீசன் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டிக்குப் பிறகு பேசிய தோனி “எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். எனக்கு அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதை ஒரு புகாராக சொல்லவில்லை. இப்போது விளையாடுவதை அனுபவித்து விளையாடுகிறேன்” எனக் கூறியுள்ளார். அதனால் இந்த சீசன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமோ என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போட்டி முடிந்ததும் விமர்சகர் ஹர்ஷா போக்ளே ‘தோனி இன்னமும் வேகமாக ஸ்டம்பிங் செய்வது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி ‘எனக்கு வயதாகிவிட்டது. அதை மறைக்க முடியாது. சச்சின் 16 வயதிலேயே அறிமுகம் ஆனதால், அவருக்கு இளம் வயதிலேயே அனுபவம் கிடைத்தது. ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

எமோஷனல் ஆன ரோஹித் ஷர்மா… ஆறுதல் படுத்திய கோலி- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments