Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது கேப்டன்சி: களத்தில் கெத்து காட்டிய தோனி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (14:28 IST)
ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடியது. இந்த போட்டியில் இந்த அணி வெற்றி பெற்றது. 
 
போட்டியின் போது, தோனி களத்தில் நின்று தனது கேப்டன்சியில் கெத்து காட்டினார். அதாவது, வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 31/2 எடுத்து தடுமாறியது. அப்போது 10 வது ஓவரில் ஜடேஜாவை  பந்து வீச ரோஹித் சர்மா அழைத்தார்.
 
ஜடேஜா தன் முதல் ஓவரின் 2 வது பந்தை நோ பாலாக்கினார். அடுத்த ப்ஃரீ ஹிட் பந்தை ஜடேஜா வைடு ஆஃப் ஸ்டம்பில் வீச ஷாகிப் அல் ஹசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
 
அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு துரத்தினார் ஷாகிப். ஜடேஜாவின் 3 பந்துகளில் 9 ரன்கள். அப்போது தோனி ரோஹித் சர்மாவை அழைத்து, பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் ஷிகர் தவணை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கினார். 
 
ஜடேஜாவிடம் பந்த எப்படி வீச வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அதே போல், ஜடேஜா பந்து வீச, ஷாகிப் பந்தை அடித்தது அது நேராக தாவணின் கைகளில் சிக்கியது. 
 
தோனியின் கணிப்பு கரெக்டாக வொர்க் அவுட் ஆனது. இதனை ரசிகர்கள் பலரும் தோனியின் கேப்டன்சி எப்போதுமே சிறந்தது என பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

மனைவியை பிரிகிறாரா சேவாக்? முடிவுக்கு வருகிறது 20 வருட திருமண பந்தம்..!

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

எனக்கு 10க்கு 7 மதிப்பெண்தான் கொடுப்பேன்- ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments