Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்தின் கோப்பை கனவை தகர்த்த தோனியின் அதிரடி [வீடியோ]

Advertiesment
வங்கதேசத்தின் கோப்பை கனவை தகர்த்த தோனியின் அதிரடி [வீடியோ]
, திங்கள், 7 மார்ச் 2016 (11:42 IST)
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

 
மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 120 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டு நிதானமாக ஆடியது.
 
ஒரு கட்டத்தில் 5 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. சராசரியாக ஓவர் ஒன்றிற்கு 10 ரன்கள் வீதம் தேவைப்பட்டது. 11ஆவது ஓவரில் இந்திய அணி 11 ரன்கள் எடுத்தது. 12ஆவது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள், தவான் ஒரு பவுண்டரி விளாச 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
 
13ஆவது ஓவரில் தவான் அவுட்டாகி வெளியேறினார். அப்போது 14 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களமிறங்கினார். முதல் இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்.
 
இந்நிலையில், 14ஆவது ஓவரை அல்-அமின் வீச வந்தார். தோனி முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். 4ஆவது பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் விளாசி வங்கதேச அணியின் கோப்பை கனவை தகர்த்தார்.

வீடியோ கீழே:

 
 

India vs Bangladesh

Posted by WYO - Wear Your Opinion on Sunday, March 6, 2016

Share this Story:

Follow Webdunia tamil