Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த போட்டிக்கு பிறகு தோனி சிறு குழந்தை போல அழுதார்… சஞ்சய் பாங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (07:36 IST)
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த 2019 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற  பிறகு மகேந்திர சிங் தோனியின் எதிர்வினை எப்படி இருந்தது என முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நினைவு கூர்ந்தார்.

அதில் “ அந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் குழந்தைகளைப் போல அழுதார்கள். எம்.எஸ்.தோனி குழந்தைகளைப் போல அழுது கொண்டிருந்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இதுபோன்ற கதைகள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த போட்டியில் 240 ரன்களைத் துரத்தும்போது டாப்-ஆர்டர் சரிந்தபோது, ​​​​தோனி உறுதியாக நின்று அரை சதம் அடித்தார். அவர் நிற்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் நூலிழையில் மார்ட்டின் கப்டில் ரன் அவுட் செய்தார். இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments