Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (14:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ரஹானே தலைமையிலான இந்திய அணி பார்டர் -  கவாஸ்கர் டிராபி போட்டியில் இரண்டாவது டெஸ்டை வென்றது.

அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அபாரமாக விளையாடி வென்று தற்போது தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணியின் ஹிட்மேன் ரோஹித் சர்மாவுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டெஸ்ட்  போட்டியை வரும் 7 ஆம் தேதி சிட்னியில் விளையாடவுள்ளது.

இதுகுறித்து பிசிசியை வெளியிட்டுள்ள அறிவிப்பில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் தனது திறமையின் மூலம் ஜொலித்த நடராஜனுக்கு டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவுகு எதிரான வாய்ப்புக் கிடைக்கவே 3 விக்கெட்டும், அடுத்து ஒருநாள் தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 2 விக்கேடுகள் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், இனி டெஸ்ட் தொடரில் 18 பேர் கொண்ட அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அவர் விளையாடுவார என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதிலும் அவர் சாதிப்பார் என அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் ஷமி கிடையாது.. காரணம் இதுதான்!

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments