புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த ஆண்டு இவர் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர் தொடரில் இருந்து விலகி இந்தியா சென்றார். அப்போதிருந்து சிகிச்சை பெற்று வந்த கிரண் பால் சிங் நேற்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் புவனேஷ்வர் குமாருக்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments