Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (11:15 IST)
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அக்ஸர் படேல் பந்தில் வந்த கேட்ச்சை கேப்டன் ரோஹித் ஷர்மா கோட்டை விட்டார். இதனால் அக்ஸர் படேலின் ஹாட்ரிக் சாதனை பறிபோனது. அது மிகவும் எளிய கேட்ச் என்பதால் அந்த கேட்ச்சை விட்டதால் ரோஹித் ஷர்மா அப்போதே அக்ஸர் படேலிடம் மன்னிப்புக் கேட்டார்.

போட்டி முடிந்த பின்னர் பேசியபோதும் அதைக் குறிப்பிட்டு “நான் அந்த கேட்ச்சை விட்டதால் அக்ஸருக்கு ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு தவறியது. அதனால் நாளை அவரை டின்னருக்கு அழைத்து சென்று அவரை சமாதானப்படுத்துவேன். நான் அந்த கேட்ச்சை கண்டிப்பாக பிடித்திருக்கவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த சம்பவம் பற்றி பேசியுள்ள அக்ஸர் படேல் “ரோஹித் கைக்கு பந்து சென்றதுமே, நான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து விட்டதாகவேக் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அப்போதுதான் அவரிடம் இருந்து பந்து நழுவியது தெரியவந்தது. அப்போது கிரிக்கெட்டில் இதெல்லாம் நடப்பது சாதாரணமானதுதான் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments