Webdunia - Bharat's app for daily news and videos

Install App

137 ரன்னில் சுருண்டது ஆஸி. : இந்தியா அபார பந்துவீச்சு!

137 ரன்னில் சுருண்டது ஆஸி. : இந்தியா அபார பந்துவீச்சு!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (16:24 IST)
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா 137 ரன்னில் சுருட்டியது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.


 
 
3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது.
 
இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 332 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30, ஜடேஜா 63, சஹா 31 ரன்களும் எடுத்து வலுசேர்த்தனர்.
 
இந்திய அணி 332 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை உணவு இடைவேளைக்கு பின்னர் தொடங்கியது.
 
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 45 ரன்னும், மேத்தியூ வேட் 25 ரன்னும் எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
 
இந்தியா தரப்பில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டையும் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 137 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 32 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் 106 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியுள்ளது. முதல் ஓவரில் 12 ரன் அடித்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது இந்தியா.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments