Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

Advertiesment
நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

vinoth

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:02 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரை வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி இதுபோல வெளியில் வைத்து வந்ததால் இந்த முடிவை அஸ்வின் எடுத்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் அஸ்வின் தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் குடியரசு தினத்தன்று அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப் படுத்தியது ஒன்றிய அரசு.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசி வரும் அஸ்வின் தனக்குப் பிடித்த வீரரான ஸ்டீவ் ஸ்மித் பற்றி பேசியுள்ளார். அதில் “ஸ்மித்தின் பேட்டிங்கை எத்தனை முறை பார்த்துள்ளேன் என தெரியாது. டிவியில் அவர் இன்னிங்ஸ்களை கைகளை எல்லாம் ஸூம் செய்து கூட பார்த்திருக்கிறேன். அப்போது என் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தால் கூட அவர்களைக் கவனிக்காமல் பார்த்துள்ளேன். நான் இப்படி பார்ப்பதை என் மனைவி ‘என்ன நீ, ஸ்மித்த லவ் பன்றீயா?” எனக் கலாய்ப்பார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!