Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரன்ரேட் பற்றி முறையாக அறிவிக்கவில்லை... ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆதங்கம்

ரன்ரேட் பற்றி முறையாக அறிவிக்கவில்லை... ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆதங்கம்
, புதன், 6 செப்டம்பர் 2023 (14:07 IST)
ஆசியக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இப்போது லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 291 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ரன்களை சேர்த்து இலங்கை அணிக்கு பயத்தைக் காட்டியது. ஒரு கட்டத்தில் ஆப்கன் அணி வெற்றிக்கு அருகில் சென்றது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் கடைசி நேரத்தில் 2 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றால்தான் ரன்ரேட் அதிகமாகி, சூப்பர் 4 சுற்றுக்கு செல்ல முடியும் என்று ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி விக்கெட்களை இழந்து வந்தனர். ஆனால் ஆல் அவுட் ஆகாமல் இருந்து இன்னும் சில பந்துகளை சந்தித்திருந்தாலே இலங்கையின் ரன்ரேட்டை சமன் செய்திருக்கலாம். ஆனால் தங்களுக்கு ரன்ரேட் பற்றி முறையாக அறிவிக்கப்படவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்கள் ரெண்டு பேர் பந்தில் விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்… கோலி கருத்து!