Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘மன்மதனே நீ கலைஞன்தான்’.. ஒரே பாட்டு.. ப்ளேயர்ஸ் அவுட்டு! – இப்படி வேற சாபம் இருக்கா?

Manmadane song Curse

Prasanth Karthick

, வெள்ளி, 3 மே 2024 (09:17 IST)
ஐபிஎல்லில் நன்றாக விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் திடீரென மோசமான அளவில் அவுட் ஆவது குறித்து சமூக வலைதளங்களில் புதிய நம்பிக்கை ஒன்று பரவி வருகிறது.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் முதல் 4 இடங்களுக்குள் நுழைந்து ப்ளே ஆப் தகுதி பெற பல அணிகளும் முயன்று வருகின்றன. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முக்கியமான ப்ளேயர்கள் எதிர்பாராதவிதமாக டக் அவுட் ஆகிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு ஒரு பாடல்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதுகுறித்து பார்ப்போம்.

ஐபிஎல்லில் விளையாடும் ஹேண்ட்ஸமான கிரிக்கெட் ப்ளேயர்களை இளம்பெண்கள் தங்கள் க்ரஷ் லிஸ்டில் சேர்த்துக் கொள்வது வழக்கம். அப்படி இந்த ஐபிஎல்லில் முதலில் க்ரஷ் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டவர் சிஎஸ்கேவுக்காக விளையாடிய ரச்சின் ரவீந்திரா. முதல் இரண்டு போட்டிகளில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் கவரப்பட்ட ரசிகைகள் அவருக்கு ‘மன்மதனே நீ கலைஞன் தான்’ பாட்டை எடிட் செய்து பரப்பினர். அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடியதுடன் தற்போது ப்ளேயிங் 11ல் இருந்தே எடுக்கப்பட்டு விட்டார்.


அதுபோல இந்த சீசனில் அதிரடி ஆட்டம் காட்டி வரும் சன்ரைசர்ஸின் அட்டகாசமான ஓப்பனர் ட்ராவிஸ் ஹெட். ஆர்சிபிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சதம், டெல்லிக்கு எதிராக 80+ ரன்கள் என ஒவ்வொரு போட்டியிலும் கலக்கி வந்தார். அவருக்கும் இந்த ‘மன்மதனே’ பாடலை எடிட் செய்தார்கள். அதற்கடுத்து ஆர்சிபியுடன் நடந்த இரண்டாவது போட்டியில் வெறும் 1 ரன் எடுத்து தோற்றார். சேஸ்கேவுடனான போட்டியில் 13 ரன்களில் தோற்றார். நேற்றைய போட்டியில்தான் சாபம் நீங்கபெற்று அரை சதம் வீழ்த்தினார்.



ஆனால் அதற்கு நடுவே க்ரஷ் லிஸ்ட்டில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ‘மன்மதனே’ எடிட் விளையாடிவிட்டது. இதுவரையிலான அனைத்து போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை கொடுத்து வந்த சஞ்சு நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனார். இவர் மட்டுமல்ல சிஎஸ்கேவின் ஷிவம் துபேவும் ஆரம்பம் முதலே ஆறுச்சாமியாக சிக்ஸர் அடித்து வந்தவர் ‘மன்மதனே’ எடிட்டில் சிக்கிய பின் சுமாராக விளையாடி வருகிறார். அழகாக விக்கெட் வீழ்த்தி வந்த மயங்க் யாதவ் இந்த பாடலால் காயம்பட்டார் என நம்பப்படுகிறது.


இப்படியாக ப்ளேயர்களின் நல்ல விளையாட்டு மோசமானதாக மாற காரணம் இந்த பாடல்தான் என்ற நம்பிக்கை சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஆனால் நன்றாக விளையாடும் ஒரு ப்ளேயர் எல்லா நேரங்களிலும் நன்றாக விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்பதே நிதர்சனம். எனினும் தற்போது இந்த நம்பிக்கை ரசிகர்களிடையே வைரலாகி விட்டதால் தங்களுக்கு பிடித்த அணி வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் முக்கிய புள்ளியாக உள்ள ப்ளேயருக்கு இந்த பாட்டை போட்டு எடிட் செய்து வருகிறார்களாம். இதனால் அந்த வீரர் மோசமான தோல்வியை சந்திப்பார் என நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே எல் ராகுல் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை… அஜித் அகார்கர் சொன்ன காரணம்!