Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றியிருந்த சர்ச்சை அடங்கிவிட்டது- ஏ பி டிவில்லியர்ஸ்!

vinoth
வியாழன், 14 மார்ச் 2024 (10:31 IST)
நடக்க இருக்கும் 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்பட்டது. அதே போல ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஏ பி டிவில்லியர்ஸ் மும்பை அணி இந்த ஆண்டு கூடுதல் பலத்தோடு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் “ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக அந்த அணியை சுற்றி சர்ச்சை எழுந்தது. ஆனால் இப்போது அது அடங்கிவிட்டதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments