Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு எதிரான 3 -வது டி-20 போட்டி... வங்கதேச அணி ஆறுதல் வெற்றி

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:51 IST)
இந்திய அணிக்கு எதிரான3  வது டி-20 போட்டியில்  வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசடத்திற்ல் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியின் முதல் போட்டியில்,  இந்தியா 7 விக்கெட்  வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இதையடுத்து,  11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில்,   இந்திய அணி 8 ரன்ககள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று ( 13 ஆம் தேதி) இரு அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி இறங்கினர். இதில், ஸ்மிருது மந்தனா 1 ரன்னுடன் வெளியேறினார்., கவுர் 40 ரன்னும், அடுத்தடுத்து வந்த வீராஙனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது இந்திய அணி.வங்கதேச அணி சார்பில் ரபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷமிமா சுல்தானா  அணியின் வெற்றிக்கு உதவினார்.

18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த அணியின் ஷமிமா 42 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில், மன்னு மணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எனவே வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments