நான் தயார் - மனோஜ் திவாரி கூறுகிறார்!
, வியாழன், 17 ஜனவரி 2013 (14:29 IST)
காயம் காரணமாக ஒரு மாதம் கிரிக்கெட் ஆட்டத்தில் இல்லாத மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மனோஜ் திவாரி காயத்திலிருந்து முழுதும் குணமடைந்து தான் தேர்வுக்குத் தயார் என்று அறிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரகா முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியை அறிவித்து விட்ட நிலையில் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் இவர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற்து. ஆனால் செடேஷ்வர் புஜாராவா இவரா என்பதில் சிக்கல் நீடிக்கும்.இங்கிலாந்து இங்கு டெஸ்ட் போட்டிகளை விளையாட வந்தபோது மும்பையில் அந்த அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிரடி 93 ரன்களை எடுத்தார் திவாரி. குஜராத்திற்கு எதிராக 191 ரன்களை விளாசியுள்ளார்.டிசம்பர் 2011-இல் தன் முதல் ஒருநாள் சதத்தை எடுத்த மனோஜ் திவாரி ஆஸ்ட்ரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் முழுதும் தோனியினால் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார்.கடைசியாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு அதுவும் 5வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் அரைசதம் கண்டார்.ஆனால் இப்போது புஜாராவா, இவரா என்ற கேள்வி எழுந்தால் புஜாராவே நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.