Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருளை அகற்றி ஒளி ஏற்ற பிறந்த குழந்தை இயேசு!

இருளை அகற்றி ஒளி ஏற்ற பிறந்த குழந்தை இயேசு!
, வியாழன், 21 டிசம்பர் 2017 (15:14 IST)
அசிரீரி ஒன்று ஒலித்தது. அதில் எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.  இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு  உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்து எழுதபட்டிருகிறது.
 
இயேசு  கிறிஸ்து  அன்பின் குழந்தை. மனு உரு எடுத்த தெய்வ குழந்தை. நமது பாவ பசியை அகற்றி அன்பின் ருசியை புசிக்க  செய்த தெய்வ திருமகன். உலகின் அவநம்பிகைகளை அகற்றி நம்பிக்கை ஒளி ஏற்ற பிறந்த நட்சத்திர நாயகன். இதிலிருந்து பிறக்கவிருக்கும் குழந்தை மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தை. அதே நேரத்தில் மனித  இனத்தோடு தம்மை ஒன்றிணைத்துக்கொண்ட கடவுளின் வெளிப்பாடு என்று புரிகிறது.
 
அக்குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கின்றார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள். இறைவன் நம்மோடு இருக்கின்றார். ஆம், இந்த நம்பிக்கையோடு இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை  நிறைவுடன் ஒருவரோடொருவர் அன்பை பரிமாறி மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல் அரித்த வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கலாமா?