Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? – தவக்கால ஸ்பெஷல்!

Jesus
, புதன், 22 பிப்ரவரி 2023 (10:43 IST)
கிறிஸ்தவ மக்களின் புனித தினமான சாம்பல் புதன் அன்று மக்கள் தங்கள் தவக்காலத்தை தொடங்குகின்றனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து தனது உயிரை சிலுவையில் நீத்தார். அவர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

அதற்கு முந்தைய 40 நாட்களை இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுக்கூறும் விதமாக தவக்காலமாக மக்கள் கடைபிடிக்கின்றனர். இந்த தவக்காலத்தை தொடங்கும் நாளாக சாம்பல் புதன் அல்லது திருநீற்று புதன் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் தவக்காலத்தை தொடங்கும் மக்கள் அசைவம் தவிர்த்து மாலை போடுகின்றனர். 40 நாட்கள் விரதமிருந்து புனித வெள்ளி அன்று வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்வது பலரிடையே வழக்கமாக உள்ளது. இன்று தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதன் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-02-2023)!