Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை கண்டிப்பு என்ற பெயரில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்...!

Webdunia
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயது முதலே கண்டித்து வளர்க்காவிட்டால் பிறகு பெரியவனாகி தவறான செயல்களில் ஈடுபடுவான் என்ற பயப்படுகின்றனர். இதனால் இப்படியே விட்டுவிட்டால் அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே? என்று பயந்து பல தண்டனைகளை கொடுத்தும் தனது குழந்தைகளை வளர்க்கின்றனர்.
நன்கு யோசித்து பார்த்தால் கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது  நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது  நல்லது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்று சொன்ன பின்னரும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
 
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான், நாம் ரொம்ப புத்திசாலிதனமாக எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும்.
 
 பெற்றோர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments