கருப்பைக்குள்ளேயே குழந்தையின் சிறுநீரகச் செயல்பாடு நடைபெறுவது உண்மையென நம்பப்படுகிறது.
பிறக்கும் போதோ அல்லது பிறந்த உடனேயோ குழந்தை சிறுநீர் கழித்து விடுகிறது. ஆனால் அந்த செயல்பாடு பல மணி நேரங்களுக்கு அடக்கிவைக்கப்படலாம்.
ஆயினும், குழந்தை 24 மணி நேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டால், இந்த நிலையை உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.
சிறுநீர்த் தாரையின் கீழ்ப்பகுதி நுனியில் ஏதேனும் அடைப்பிருக்கிறதா என்பதை அவர் சரிபார்க்க வேண்டியிருக்கும்.
பிறந்த இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தினந்தோறும் குழந்தை பத்து முதல் 15 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.