பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு நன்மையை அளிக்கும். ஆனால் தற்போது விற்பனையில் பழச்சாறு என்று கூறி விற்கப்படும் பல பொருட்களில் எந்த பயனும் இல்லை.
மாறாக அதில் சில கெடுதலான விஷயங்கள்தான் உள்ளது.
இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று.
மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுக்காதீர்கள்.
பழச்சாறு என்பது ஒன்று நீங்கள் வீட்டில் தயாரித்துக் கொடுப்பது, அல்லது சுத்தமான முறையில் கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.