Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரவிருக்கும் மத்திய பட்ஜெட் எண்ணென்னஅம்சங்கள் இருக்கும்: தினேஷ் அகர்வால்

Advertiesment
வரவிருக்கும் மத்திய பட்ஜெட் எண்ணென்னஅம்சங்கள் இருக்கும்: தினேஷ் அகர்வால்
, வியாழன், 18 பிப்ரவரி 2016 (17:30 IST)
வரும் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கைகளில் தொழில்துறையில் முன்னேற்றம் காண என்னென்ன மேற்கோள்கள் இருக்கும் என தனது எதிர்பார்ப்பாக தினேஷ் அகர்வால் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
 
ஆங்கர் எலக்ட்ரிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் தினேஷ் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட பட்ஜெட் மேற்கோளில்:-
 
“நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்த கட்டுமான தொழிலில் தேவைகள் போதுமானதாக இருந்தது, சில மெட்ரோ மற்றும் புறநகர் அல்லது பாதி மெட்ரோ நகரங்களின் வணிக (அலுவலகம்) இடங்களில் தேவைகளுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டது. தொழிற்சாலைகளின் கட்டுமானம் வேகம் பெற்றுள்ளது மற்றும் இதில் சில விரைவு திட்டங்கள் இருப்பது நமது பொருளாதாரத்தின் நிலையான வளர்சிக்கு சாதகமான எதிர்பார்ப்புகளாக பார்க்கப்படுகிறது.
 
பல மாநிலங்கள் நமது பிரதமரின் தொலைநோக்கு திட்டமான “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு உத்வேகம் அளித்து செயல்படுத்துகின்றன மற்றும் இந்த திட்டம் உற்பத்தி துறையில் மேலும் பல அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும், அடிப்படையில் இது உளநாட்டு நுகர்வை நோக்கமாக கொண்டது. எதிர்வரும் பட்ஜெட் மற்றும் கொள்கைகள் தற்போது இந்த திட்டத்தை தாங்கி பிடித்து உருவாக்கும் விதமாக தனது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
 
எனவே, எதிர்வரும் பட்ஜெட் தொழில்களை எளிதாக நிறுவும் வகையில் எளிமை, அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதில் எளிமை, வியாபாரத்தை நடத்துவதில் எளிமையாக்கம், வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்ய இந்தியாவிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் பணம் கடன் பெறுவதை எளிமையாக்குதல் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். “மேக் இன் இந்தியா” பெருமளவு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்தாலும், அது பல உள் சவால்கள் கொண்டது.
 
இந்த ஆண்டின் கொள்கைகள் இந்தியாவின் உற்பத்தி மீது மட்டும் கவனம் செலுத்துவதாக இருக்காது என நான் எதிர்பார்க்கிறேன், ஆனால் அது இந்தியாவில் உற்பத்தியை உறுதியாக வளர்க்கும், இதனையொட்டி எதிர்காலத்தில் தொழில்துறையில் பல வேலைவாய்ப்புகள் மற்றும் ஈடுபாடுகள் ஏற்படும்.
 
அதிக திறன் கொண்ட மற்ற நாடுகளின் தேவையற்ற போட்டிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள் இடையே உருவாக்கப்படகூடாது என உற்பத்தியாளர்களுக்கு உறுதியளிக்க கூடிய அம்சம் இந்த பட்ஜட்டில் இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். என தினேஷ் அகர்வால் கூறியிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil