Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:21 IST)
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் லைகர் திரைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண அவர் துபாய்க்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் தெலுங்கு வரணனைக் குழுவோடு உரையாடினார். அப்போது அவரிடம் எந்த வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் “தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது ஏற்கனவே உருவாகி விட்டது. அதனால் இப்போது விராட் கோலியின் பயோபிக் உருவானால் அதில் நடிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.’

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

கிளாமர் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வைரலாகும் அட்டகத்தி நந்திதா!

அடுத்த கட்டுரையில்
Show comments