இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி அவுட் ஆன விதம் குறித்து பேசியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் போட்டி மிகவும் பரபரப்பாக சென்ற நிலையில் த்ரில் வெற்றியை இந்திய அணி ருசித்தது. இந்த போட்டியில் பார்ம் அவுட்டில் இருந்த கோலி, நிதானமாகவும் சிறப்பான ஷாட்களை விளையாடியும் 35 ரன்கள் குவித்து நம்பிக்கையைப் பெற்றார். ஆனால் அவர் தேவை இல்லாத ஒரு ஷாட்டை விளையாடி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதுபற்றி பேசியுள்ள கம்பீர் “ரோஹித் அவுட் ஆனதும் கோலி ஏமாற்றம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன். அவர் ஆடிய ஷாட்டை நினைத்து அவரே அதிருப்தி ஆகியிருப்பார். அவரின் இத்தனை வருட அனுபவத்தில் அந்த ஷாட் தேவையில்லை என நினைத்திருப்பார். உங்கள் கேப்டன் இப்போதுதான் அவுட் ஆகியிருக்கிறார். நீங்கள் அடுத்து வந்துள்ள வீரரோடு சேர்ந்து ஸ்கோர்களை சேர்த்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.